Saturday, September 5, 2015

என் கண்ணா, ஏன் கண்ணா ?


என் கண்ணா, ஏன் கண்ணா ?

வாரணம் போல் வாரி சேற்றை சூடி நின்ற பாவியேன்
நாரண! நின் நாமம் நன்றியின்றி நான் மறந்தனே
காரணம் என் காதலுக்கும் காமத்துக்கும்  நீ என
நாரண உனை கடிந்து எந்தன் பாவம் போற்றினேன்
பூரண நின் பற்பபாதம் நாளும் போற்றும் நல்லவர்
சீரணிந்த சேவடி தமை மறந்து நானுமே
ஆரம் தன்னை தாங்கும் தோள்கள் கொண்ட பெண்டீர் தம்மையே
வாரி பின் அணைக்க எண்ணி  ஆக்கை ஆக்கி வைத்தனே

ஆனை  காக்க வந்தவா நின் காவல் வேழம் ஒன்றுக்கோ?
சேனையாழி  சங்கும் தண்டும் வில்லும் சூட மட்டுமோ?
தேனை ஒத்த பாக்கள் சொல்லும் பாவலர் தமை தவிர்ந்த
ஏனையோர் தமை நினைக்க இன்று இல்லை நேரமோ?
வானை மண்ணை உண்ட பின்னே வந்ததோர் கிறக்கமோ?
ஆணையேர்க்கும் அரவினமளி மீது நல்லுரக்கமோ?
என்னை இந்த ஆழிதன்னில் சுழல வைக்க எண்ணமோ?
ஆணை உனது அதுவே என்னில் மறுக்க என்னால் இயலுமோ?

அன்னை உன்னை கட்டி வைத்த தாம்பின் கட்டின் தாக்கமோ ?
அய்யன் கோதை மாறன் மங்கைமன்னன் பா மயக்கமோ ?
பின்னை தன்னை  நீங்க மாட்டேன் என்ற  உந்தன் போகமோ?
மண்ணைகொண்ட மாயம் கண்ட மன்னன் சேவை மோகமோ?
வெண்ணை கொண்டொளிந்து பாண்டன் பானைக்குள் உறக்கமோ?
விண்ணை ஆளும் வேந்தன் என்ற ஆணவத்தின் தாக்கமோ?
கண்ண உந்தன் காதல் கூட கண்டதின்று தேக்கமோ?
என்னை செற்ற மாயன் என்ன நாமம் கொள்ள ஏக்கமோ?

2 comments:

  1. Adiyen ramanuja dasan.
    வளர்க உம் இறை தொண்டு

    ReplyDelete
  2. Adiyen ramanuja dasan.
    வளர்க உம் இறை தொண்டு

    ReplyDelete