Thursday, August 27, 2015

பெயர் இல்லை என்னிடம் - 2007

கல்லணைக்கும் படியாத
காட்டு நதியாய் ஓடியவனுக்கு
சொல் ஆணை இட்டு
சீராய் செல்ல வழி வகுத்தாய்
நன்றி!
மாடத்து மணிப்புறா ஒன்றிடம்
மடல் அனுப்ப, முயன்று முடியாமல்,
தென்றல் தூது கொண்டு,
உன் தொண்டினை நீ தொடர்ந்தாய்
நன்றி!

உன் ஒரு வரி கொண்டு,
புது முகவரிகள் பல காட்டி
சத்தமில்லாமல், சட்டென
ஒரு நாள், நீ விடை பெற
அன்று

கற்றிடும் கல்விகூடத்தின்
காட்சி திரை தனில்
வெற்றிடம் கண்ட
என் பெயர் வருந்தி
அக்கணமே,

காணாததை தேடி,
கிளம்பியது படி தாண்டி
கதிரவனை தேடியது
ஒரு மலராய் அது வேண்டி
இனி,

கவிதைகள் இங்கே, நான்
பல ஆயிரம் உரைத்தாலும்,
எண்ணங்கள் தினம் பல,
என்னுள் உதித்தாலும்
அந்தோ!

சொற்றொடர் எல்லாம்
அழகாய் அமைத்து முடித்து,
பின், அச்சில் அதை
சீராய் ஏற்றிவிட்டு
பின்

இந்த உலகிற்கு, ஏன்?
உனக்கும் கூறலாம் என்றால்
அதன் கீழ் இட, இன்று
பெயர் இல்லை என்னிடம்

No comments:

Post a Comment