Thursday, August 27, 2015

மழையும் வெயிலும் - 2007

கதிரவன்  மேல்  உண்டு,
அவன்  கீழ் முகில்  உண்டு
முகில்  தனில் நீர்  உண்டு,
சொல்வார்,  அதை  மழையென்று

உன்னை  கண்ட நொடி  கொண்டு,
உணர்தேன்,  உலகம் மெய்  என்று,
உன்  முகமெனும்  வான்வெளியில்,
கண்டேன்  விழி எனும்  முகில் ரெண்டு

விசும்பலெனும்  இடி முழங்கி,
நீ  அழ, இங்கு  மழை உதயம்,
பூமியில்  ஒரு நீர்த்துளி  விழ,
நனைந்ததென்னவோ , எந்தன்  இதயம்

விழுந்த  உன்  கண்ணீர்  துளியை
தாவி  தாங்கினேன் என்  உள்ளங்கையில்
கோடி  கொடுத்தாலும் கிடைக்காதிதுவென
நான்  சொல்ல, உன்  சிரிப்பில் மீண்டும்  மஞ்சள்  வெயில்

No comments:

Post a Comment