Friday, August 28, 2015

ஏனோ பெண்ணே ?

நாணிச்சிவந்தாய் கவர்ந்தாய் 
கண்களால் காதல் உரைத்தாய் 

இருளில் உறைந்த என் மனத்திற்க்கு 
உன் சிரிப்பெனும் தூரிகையால் வண்ணம் சேர்த்தாய் 

பாறையாய் இருந்த உள்ளத்தை 
அன்பெனும் உளியால் செதுக்கினாய் 

கரைப்பார் கரைத்தால் கல்லும் கறையுமென 
செயல்களால் உணர்த்தினாய் 

இளகினேன் உறுகினேன் 
உன் காதலில் சிக்கித்தளைத்தேன் 

நிலவை கண்ட காரிருள் போல் 
ஒளி கண்டேன் காதல் கொண்டேன் 

நிலவாய் என்றும் இருப்பாய் என  நான் எண்ண 
மழை வரை வாழும் முகிலென மறைந்தாய் 


நிலைத்து நிற்கும் நம் காதலென சொல்லிவிட்டு 
இன்று நினைவில் மட்டதும் நிலைத்ததேனோ பெண்ணே?

No comments:

Post a Comment