வான்மழை விழுந்த நாளில்
கை கோர்த்து ஆடி களித்து
மழைத்துளிகள் கீழே வர
என் கரங்களை பற்றிக்கொண்டு
உள்ளங்கையில் ஓர் நீர்த்துளி விழ
'நம் காதல் இது , காத்து வை ' என்றாய்
அம்மழை நின்று தெளிந்த பின்னும்
சொல்லிற்க்கிணங்கி நான் அப்படியே நிற்க,
கடமை முடித்து மறைந்த மேகங்கள் போல்
சொன்ன காதல் பொய்யென நீ சென்று விட்டாய்
இல்லாத நீர்த்துளி இன்றும் காப்பாவனுக்கு ஒன்று சொல்
என் கண் மழை விழும்போது எதில் காப்பாய் ?
கை கோர்த்து ஆடி களித்து
மழைத்துளிகள் கீழே வர
என் கரங்களை பற்றிக்கொண்டு
உள்ளங்கையில் ஓர் நீர்த்துளி விழ
'நம் காதல் இது , காத்து வை ' என்றாய்
அம்மழை நின்று தெளிந்த பின்னும்
சொல்லிற்க்கிணங்கி நான் அப்படியே நிற்க,
கடமை முடித்து மறைந்த மேகங்கள் போல்
சொன்ன காதல் பொய்யென நீ சென்று விட்டாய்
இல்லாத நீர்த்துளி இன்றும் காப்பாவனுக்கு ஒன்று சொல்
என் கண் மழை விழும்போது எதில் காப்பாய் ?
Very very expressive.. way to go Ram!
ReplyDelete