Friday, August 28, 2015

காற்றில் நானும் தவழ்ந்து வருவேன்

உன் பூவிரல் கொண்டு 
தம்புரா தந்திகள் நீ வருட
நாணிய அவற்றின் சிரிப்பொலி 
ஸ்வரங்களாய் உன் செவி அடைய 
லயித்து ஒரு கணம் மெலிதாய் 
ஒரு புன்னகை பூக்க கண்டு
அவற்றுடன் நானும் 
ஒரு ஸ்வரமாய் ஒட்டிக்கொண்டு 
உன் செவிக்குள் சென்று 
உன் இதயம் தனை கவர
இன்று கொண்டு தினம் தினம்
காற்றில் நானும் தவழ்ந்து வருவேன்

No comments:

Post a Comment