Monday, August 31, 2015

விந்தையென்ன விந்தையடி?

நீலவானில் நீந்தியாடும் கார்முகில்கள் எல்லாம் கண்டு, 
வாரியெடுத்து ஆதவன்தன் கதிர்களை  கோர்த்து அவைதமை, 
உன் கண்ணெனும் ஊசிமுனை  தன்வழி சீராய் செலுத்தி, 
நேர்த்தியாய் சீருடை எனச்செய்து நறுமுகையே நீ உடுத்த, 
முகில் பின்னே அவ்வழியே ஆதவனும் ஆசையுடன், 
உன் முகம்தனில் புன்னைகையாய் தனக்கொரு இடம் பிடிக்க, 
மிஞ்சிய  அவன் கதிரெல்லாம் உன்விழியில் ஒளிரப்புக,
மாலை நேர செந்நிறமும் உன்னிலேறி மெருகு சேர்க்க,
தான் கொண்ட தமரெல்லாம் தன்வழியே செல்லக்கண்டு ,
முகில் தனை கொண்ட  வானும் தனை சுருக்கி அவைகளோடு ,
விரைந்துந்தன் புருவங்களிடையே  நிலைகொண்டு,  நீலப்பொட்டாகி,
முகில்கொண்ட வானாய் தானங்கே இடம்பெற்று பாங்காய் நிற்க, 
நாணமின்றி அவைகளுன்னை அணைத்துக்கொண்டு புன்னகைக்க, 
வானமின்றி போன மதியும் நானும் ஒன்றுகூடி உன்னை,
மதியிழந்து வியந்து நின்ற விந்தையென்ன விந்தையடி?

No comments:

Post a Comment